Monday 28 May 2012

நீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா?



கோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா  அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு  நான் இணையத்தில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக நீயா நானா இருந்தது .இன்று சில நேரங்களில் கோபிநாத் நடத்தும் நிகழ்சிகள் அசிங்கத்தின் உச்சியை தொட்டு விடுகிறது .



இந்தவார தலைப்பு போலி கவுரவம் .சரியான தலைப்புத்தான் .நிகழ்வும் தலைப்பை ஒட்டி போய்க்கொண்டு இருந்தது .சிறப்பு அழைப்பாளராக பவர் ஸ்டார் என அழைக்கப்படும் டாக்டர் சீனிவாசனை அழைத்தார் .கோபிநாத் அவரிடம் என்ன கேட்டு இருக்க வேண்டும் .போலிகவுரவம் பற்றியல்லவா .கோபிநாத் அதை விட்டுவிட்டு சீனிவாசனையே அசிங்கத்தின் உச்சமாக திரும்ப திரும்ப கேள்விகள் கேட்கிறார் நீங்க ஏன் அதில் இருந்து வெளிவர மறுக்குறீங்க என .ஒரு சபைக்கு ஒருவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கோபிநாத் அவர்களே அசிங்கபடுத்த வேண்டுமா .

பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த ஒரு கேள்விக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் .அதே இடத்தில் வேறு ஒரு நடிகரை கேள்வி கேட்டுவிட முடியுமா கோபிநாத் .சீனிவாசன் புரிந்து பதில் அளித்தாரா இல்லை புரியாமல் பேசினார தெரியவில்லை ,இப்பொழுது யோசிக்கும்போளுது கோபிநாத் கேட்ட கேள்விக்கெல்லாம் ஜென்டில்மேனாக இருந்து இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம் .

....................................................................................................................................

மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்த இரண்டு விவாதங்கள் .ஒரு விவாதத்தில் ஒரு பக்கம் கணவர்களும் ஒரு பக்கம் மனைவிகளும் .அந்த விவாதத்தில் ஒரு பெண் பேசியதை மட்டும் எழுதுகிறேன் .அவர் சொல்கிறார் அடுக்களையில் நின்ற என்னிடம் என் கணவர் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் கோபப்பட்டு தெருவில் போகும் நாயும் சும்மா பேசும் வாயும் அடிவாங்காமல் போகாது என கணவனை பார்த்து கேட்டேன் என சொல்கிறார் .கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டையை உலகறிய பார்க்கும் ஒரு விவாதத்தில் ஒரு பெண் இப்படி சொல்கிறார் .அன்று பேசிய அத்தனை ஆண்களும் பெண்களும் அபத்தமாக பேசினர்.இதை சிரித்துக்கொண்டே கோபிநாத் வழிநடத்துகிறார் .
........................................................................................................................................

அடுத்த வார  தலைப்பு பெண்களின் உடை சுதந்திரம் பற்றி .பெண்கள் காலத்திற்கு ஏற்ப உடை நாகரீகமாக அணிவதில் தவறில்லை .ஆனால் அசிங்கமாக உடை அணிவதையோ அல்லது தவறான வாசகங்கள் பொறித்த டீ சர்ட் அணிவதை நாகரீகம் என சொல்லமுடியுமா .அந்த நிகழ்சியில் ஒரு பெண் பேசியது .உடை அணிவது என் சுதந்திரம் .நான் எப்படி வேண்டுமானாலும் உடை அணிவேன் .நீ அதை பார்ப்பதோ விமர்சனம் பண்ணுவதோ தவறு என பேசுகிறது .இந்த நிகழ்வுக்கு வந்து இருந்த குட்டி ரேவதி ,டாக்டர் ஷாலினி ,கவிதா போன்றவர்கள் அது சரி என வாதிடுகின்றனர் .நாங்கள் பாலியல் தூண்டும் விதமாக உடை அணிவோம் ,நீங்க பார்த்து பொத்திக்கொண்டு போகவேண்டும் என பேசியது அந்த பெண் .

நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்து இருந்த கல்லூரி பேராசிரியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான கல்லூரி பெண்கள் என்னிடம் சொன்னது எங்கள் உடைகள்தான் காரணம் என .அவரையே மறுத்து இந்த பெண்ணியவாதிகள் பேசினர் .பாதி நிகழ்விலேயே அவரை அனுப்பி விட்டனர் .

கோபிநாத் நினைத்துக்கொண்டு இருக்கிறார் அறிவுசார் நிகழ்சிகள் படித்துக்கொண்டு இருக்கிறேன் என .சில நேரங்களில் அசிங்கங்களையும் அரங்கேற்றிகொண்டு இருக்கிறார் என்பதே இன்று நிஜம்

7 comments:

  1. கோபிநாத் எப்பவும் மக்களுக்கு நல்லது செய்யிற நிகழ்ச்சி நடத்த முடியாது.இனி சொத்தைப் பல்லுக்குள் கம்பி விடுவமா குச்சி விடுவமா என்று தான் நடத்த முடியும்

    ReplyDelete
  2. தொடர்ந்து அசிங்கங்கள் மட்டுமே அரங்கேற்றப்படும் இந்நிகழ்ச்சியை பலரும் எப்போதோ புறக்கணித்து விட்டனர்.!

    ReplyDelete
  3. நேற்றுவரை நானும் பவர் ஸ்டார் ஏளனப் பார்வையுடன் தான் பார்த்தேன். ஆனால் கோபிநாத் என்கிற முட்டாளால் பவர் ஸ்டாரின் உண்மையான முகம் தெரிந்தது.

    ReplyDelete
  4. கோபிநாத்துக்கு இது தேவையில்லாத வேலை.
    என்னை கவர்ந்த மனிதர்களில் பவர்ஸ்டார் ஒருவர்.காரணம் அவருடைய பொருமை.தன்னை கேவலப்படுத்தும் மனிதர்களிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தாத(வெளிப்படுத்த தெரியாத குழந்தை மனம் என்றே சொல்லலாம்) நல்லுள்ளம் கொண்டவர்.ஏன் அவரெல்லாம் நடிக்க வரக்கூடாதா என்ன?இப்பொழுது இருக்கும் முன்னனி ஹீரோக்களை(ரஜினி,கமல்,விஜயகாந்த்) விட வயதில் சிறியவர்தான்.நடிக்க வருபவர்களுக்கு கூச்சமே இருக்கக்கூடாது அவன் தான் உண்மையான நடிகன்.அந்த தகுதி உண்மையில் பவர்ஸ்டாருக்கு மட்டுமே உண்டு.எங்கே முன்னனி நடிகர்களான அந்த மூவரில் ஒருவரை அழைத்துவந்து இவரை கேவலப்படுத்தியதுபோல் ஒரு நிகழ்ச்சியை நடத்துங்களேன் பார்க்கலாம்.இவரைப்போல பொருமையுடன் பதில் சொல்கின்றார்களா என்று பார்ப்போம்.பவர்ஸ்டார் உண்மையில் ஒரு GENTLEMAN தான்.

    ReplyDelete
  5. கலைத்துறையில் காலடி வைத்தபோது அதற்க்கு கொஞ்சமும் தகுதியில்ல்லாதர் என்று உதாசீன படுத்தப்பட்ட ஆட்சி மனோரமா, எத்தகைய சிகரத்தை எட்டினார் என்று நான் சொல்ல தேவையில்லை

    பொறுமையும் நிதானமும் கொண்டவர்கள் உலகை வென்றிருக்கிறார்கள்,

    இருவருமே உதாரணம் தான், பொது இடத்தில் ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்கு கோபிநாத்தும், அதே பொது இடத்தில் ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு பவர் ஸ்டாரும் ..

    ReplyDelete
  6. பவர் ஸ்டார்-ஐ பாவம் ஸ்டார்-ஆக மாற்றி விட்டார்கள் ..

    உண்மையில் நல்ல மனிதர் . இந்த பொறுமையுள்ள மனிதருக்கு நல்ல எதிர்காலம் கட்டாயம் இருக்கும்

    ReplyDelete