Sunday 18 November 2012

தனியார் மருத்துவமனைகளின் அலட்சியமும் ஒரு உயிரின் ஊசலாட்டமும் . - ஒரு நேரடி ரிப்போர்ட்


தீபாவளி இரவு அன்று டெங்கு காய்ச்சலுக்கு அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த என் மச்சானை உடனடியாக திருச்சியில் சேர்க்க சொல்லிவிட்டார்கள் .என் மச்சான் வாய் பேசமுடியாதவர் .இரவு பத்து மணிக்குமேல்தான் திருச்சியில் சேருங்கள் என்று சொன்னார்கள் .

அதன்பின்பு என் கிராமத்தில் இருந்து வாடகை கார் எடுத்துக்கொண்டு என் மச்சான
ையும் அவர் மனைவியையும் மற்றும் இரண்டு பெண்கள் என் மகன் ஆகியோர் திருச்சி பயணமானோம் .திருச்சியை நாங்கள் சென்று அடையும்போது இரவு மணி ஒன்று .இதற்க்கு இடையில் என் மச்சான் காரில் பட்டபாடு சொல்லி அழமுடியாது .வாய் பெசமுடியாதவரால் ஒன்றும் சொல்லமுடியாமல் துடிப்பதும் அழுவதுமாக எங்களோடு பயணித்தார் .

திருச்சியில் நாங்கள் முதலில் சென்றது அமெரிக்கன் மருத்துவமனை .அங்கே இருந்த ஒரு மருத்துவ பெண்மணி மருத்துவர்கள் அனைவரும் விடுமுறையில் உள்ளனர் .இப்ப இங்கே தங்குவதற்கு பெட்டும் இல்லை .நோயாளி அன் கண்டிசனில் இருக்கிறார் .உடனடியாக வேறு ஒரு மருத்துவமனையில் சேருங்கள் என்று சொல்லி விட்டனர் .

அதன்பின்பு நாங்கள் சென்றது கே எம் சி மருத்துவமனைக்கு .அங்கே இருந்த ஒரு பரதேசி நாய் கொஞ்சம்கூட ஈவு இறக்கம் இல்லாமல் இங்கே இப்பொழுது அனுமதிக்க முடியாது .நீங்க வேறு மருத்துவனை பாருங்க என சொல்லிவிட்டான் .நாங்கள் என் மச்சானின் நிலையை எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் அரசு மருத்துவமனையில் சேருங்கள் என சொன்னான் .நேரம் ஆக ஆக என் மச்சான் வயிறு வலியில் துடிப்பதும் நெஞ்சை அடைப்பதுமாக அவதிப்பட்டுகொண்டு இருந்தார் .

அதன்பின்பு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பிரண்ட் லைன் மருத்துவமனை சென்றோம் .அங்கே இருந்த நர்சும் இப்ப இங்கே சேர்க்கமுடியாது என சொல்லிவிட்டனர் .







அதன்பின்பு கீதாஞ்சலி மருத்துவமனை சென்று கேட்டோம் .அவர்களும் அனுமதிக்க மறுத்தனர் .அங்கே இருந்த நர்ஸ் சுதர்சனா மருத்துவமனையில் சேருங்கள் என்று சொன்னார் .நாங்கள் சுதர்சனா மருத்துவமனை சென்று அனுமதிக்க சொன்னோம் .அங்கே இருந்த
நர்சுகள் என் மச்சானை அனுமதித்து பரிசோதனையும் செய்தனர் .என்ன செய்கிறது என கேட்டனர் .நாங்க அறந்தாங்கி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சேர்த்து இருந்ததையும் வெளியே சென்றது கருப்பாக இருந்தததையும் சொன்னோம் .
நர்ஸ் போய் மருத்துவரிடம் பேசிவிட்டு வந்து இங்கே அனுமதிக்க முடியாது மருத்துவர் ஊரில் இல்லை என்று சொல்லி விட்டனர் .எவ்வளவோ சொல்லி பார்த்தோம் .அவர்கள் கேட்கவில்லை .

அதன்பின்பு விடியல் காலை நான்கு மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நான் மட்டும் காரில் திரும்பிக்கொண்டு இருந்தேன் .காலை ஆறுமணிக்கு திருச்சியில் இருந்து தொலைபேசி வருகிறது .என் மச்சானுக்கு அடுத்து அடுத்த பெட்டுகளில் இருந்த மூன்று பேர் மரணம் அடைந்து விட்டார்கள் என்று .அதை பார்த்த என் மச்சான் அவரின் தங்கையின் காலில் கும்பிட்டு விழுந்து இருக்கிறார் .என்னை இங்கே வைக்காதே .என்னை வெளியில் எங்காவது கொண்டுபோய் காப்பாற்று என அழுது இருக்கிறார் .
அந்த சமயம் அங்கே வந்த காலை டூட்டி மருத்துவரிடம் கேட்டதற்கு உங்கள் அண்ணன் அன் கண்டிசனில் இருக்கிறார் .எது வேண்டுமானாலும் நடக்கலாம் என சொல்லி விட்டார் எந்த இரக்கமும் இன்றி .

அதன்பின்பு கொண்டுபோன எந்த பொருளையும் எடுக்காமல் அங்கே இருந்தவர்களுக்கு தெரியாமல் என் மச்சானை ஆட்டோவில் அழைத்துக்கொண்டுபோய் ஏ பி சி மருத்துவமனை கொண்டுபோய் இருக்கின்றனர் .அங்கேயும் அவர்கள் சேர்க்கவில்லை .இது எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்த என் மச்சான் மரண பயத்தில் அழுது இருக்கின்றார் .

ஊருக்கு வந்த நான் இன்னும் இரண்டுபேரை அழைத்துக்கொண்டு என் உறவினர் காரோடு புதுக்கோட்டையில் காத்துகொண்டு இருந்தேன் .திருச்சியில் இருந்து ஒரு கார் எடுத்துக்கொண்டு என் மச்சானும் உறவினர்களும் வந்து சேர்ந்தனர் .







கடைசி முயற்சியாக மச்சானை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை சென்றோம் பகல் பனிரெண்டு மணி அளவில் .அவர்கள் உடனடியாக எமெர்ஜென்சி வார்டில் அனுமதித்து அவசர சிகிச்சை செய்தனர் .

இறந்துபோய் விடுவார் என நாங்கள் நினைத்த என் மச்சான் இன்று நலமுடன் உள்ளார் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்ததால் .

திருச்சி கே எம் சி ,அமெரிக்கன் ,பிரண்ட் லைன் ,கீதாஞ்சலி ,சுதர்சனா போன்ற மருத்துவமனைகள் எதற்க்காக .அவர்களுக்கு பணம் மட்டுமே முக்கியமா .ஒரு உயிரின் அவசியம் தெரியாமல் எதற்க்காக மருத்துவமனை நடத்துகிறார்கள் .

Tuesday 13 November 2012

துப்பாக்கி சீறியதா? பதுங்கியதா?- ஒரு அலசல்



படம் பார்க்கபோகும் முன்பு எந்த எதிர்பார்ப்பையும் சுமந்து செல்லாமல் துப்பாக்கி படத்திற்கு சென்றேன் .படம் ஆரம்பித்து பதினைந்து நிமிடம் சென்றே திரை அரங்கினுள் சென்றேன் .

கதை என்ன என்பதை ஒரு வரியில் முடித்துவிடலாம் .ராணுவத்தில் வேலை பார்க்கும் விஜய் விடுமுறையில் ஊருக்கு வரும்போது தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவது கதை .அதை சொன்னவிதம்தான் படம் நன்றாக அமைந்து இருக்கிறது .

விஜய் பொண்ணு பார்க்
கபோய் அந்த பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமா இருக்க விஜய் வேணாம்னு சொல்லிட்டு காஜல் அகர்வாலை குத்துசண்டை போட்டியில் பார்க்கும்போது சிரிப்பு வருவதை தடுக்கமுடியவில்லை .விஜயோடு சேர்ந்து சத்யனும் காமடியில் கலக்கி இருக்கிறார் .காஜல் அகர்வால் கதாநாயகி இலக்கணப்படி சில காட்சிகளும் பாடல் காட்சிகளில் வந்தாலும் காமடியிலும் நடிப்பிலும் அசத்தி இருக்கிறார் .

விஜயை இதற்க்கு முன்பு இவ்வளவு அழகாக யாரும் காட்டி இருக்கின்றார்களா என தெரியவில்லை .ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் இயக்குனர் முருகதாசும் மிக மெனக்கெட்டு இருக்கின்றனர் .விஜய் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து இருக்கிறார் .தான் இதற்க்கு முன்பு நடித்த சாயல் வராமல் இருக்க மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் .சண்டைகாட்சிகளில் விஜயின் ஆக்சன் அவரின் ரசிகர்களுக்கு செம தீனி .பாடல் காட்சியிலும் தான் ஒரு சிறந்த டான்சர் என்பதை இந்த படத்திலும் நிருபித்து இருக்கிறார் .

அப்புறம் அந்த தீவிரவாதிகள் எல்லா படத்திலும் வருவதை போல இந்த படத்திலும் கடைசிக்காட்சியில் உயிரை விடுவதற்காக நடித்து இருக்கின்றார்கள் .

எடிட்டர் உழைப்பு நன்றாக தெரிகிறது .மிக நீளமான படத்தை போர் அடிக்காமல் இருப்பதற்கு அவரது கத்தி உதவி இருக்கின்றது .

படத்தில் காமடி இருக்கு .நல்ல சண்டை இருக்கு .கொஞ்சம் கதை இருக்கு .எல்லோரிடமும் கொஞ்சம் நடிப்பும் இருக்கு .ஆனா இந்த ஹாரிஸ் ஜெயராஜ் எதற்க்காக இந்த படத்திற்கு .பாடல்கள் கேக்கும்போது நன்றாக இருப்பதாக தோன்றினாலும் எல்லா பாடலும் அவர் இசை அமைத்த பாடலில் இருந்தே எடுத்து போட்டு இருக்கின்றார் .பின்னணி இசையில் ஏழாம் அறிவு படத்தில் பயன் படுத்திய இசையை பயன்படுத்தி இருக்கின்றார் .

நீங்க இந்த படத்தில் விஜயை ரசிக்கலாம் .முன்பு பார்த்த அவரது படம்போல இந்த படம் இல்லை .கண்டிப்பாக திரை அரங்கில் பாருங்க .

துப்பாக்கி .தோட்டா சீறிபாயும்

Thursday 1 November 2012

ஏழாம் உலகமும், ஜெயமோகனின் ஏழரையும்..............


ஒரு வழியா ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் படித்து முடித்துவிட்டேன் .நீண்டநாட்களாக படிக்க நினைத்து தேடி வாங்கிய புத்தகம் அது .நான் தேடியலைந்த காரணம் இந்த நாவலை படித்து முடிக்காதவர்கள் இலக்கியம் படிக்கமுடியாது போன்ற மாயதொற்றங்கள் உருவாக்கப்பட்டதால் .

நான் ஜெயமோகன் தளத்திற்கு போய் படிக்கும்போதெல்லாம் ஏழாம் உலகம் நாவல் படித்தவர்கள் எழுதிய கடிதங்களும் அதற்க்கு ஜெயமோகன் சொல்லிவரும் பதிலும் இ
ந்த நாவலை இன்னும் படிக்காமல் இருக்கோமே என என் எண்ணங்களை தூண்டிக்கொண்டே இருந்தது .இந்த நாவலோடு விஷ்ணுபுரம் ,பின்தொடரும் நிழல் போன்ற நாவலுக்கும் ஏதாவது கடிதமும் ஜெயமோகனின் பதிலும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் .ஏழாம் உலகம் நாவல் படித்தவர்கள் எழுதியதுபோல மனதை உலுக்கி செல்கிறதா இந்த நாவல் என்று என்னை கேட்டால் இல்லை என்றே சொல்வேன் நான் .

எதற்காக ஏழாம் உலகம் நாவல் பற்றி இவ்வளவு பிதற்றல்கள் என தெரியவில்லை .இயக்குனர் பாலா எடுத்த நான் கடவுள் இந்த படத்தின் கதையை ஒற்றி எடுக்கப்பட்டு வசனமும் ஜெயமோஹனே எழுதி இருந்தார் .நான் கடவுள் எனக்குள் ஏற்ப்படுத்திய பாதிப்பை சிறிதேனும் ஏழாம் உலகம் நாவல் என்னுள் ஏற்ப்படுத்தவில்லை .

வட்டார வழக்கில் எழுதிய ஒன்றை தவிர இந்த நாவலில் வேறேதும் விசேஷம் இருப்பதாக தெரியவில்லை எனக்கு .நாவலில் போகிற போக்கில் எம்ஜியாரையும் ,ஓவியர் மணியன் அவர்களையும் ,ரஜினிகாந்த் அவர்களையும் கிண்டல் செய்து தன் மனவக்கிரத்தை தீர்த்துக்கொண்டு உள்ளார் .



மாற்றுத் திறநாளி என இன்று கவுரவமாக அழைக்கபடுபம் உடல் ஊனமுற்றவர்களை வைத்து கதை எழுதி உள்ளார் .அப்படி எழுதியவற்றில் நிறைய முரண் இருக்கிறது .உடல் ஊனமுற்ற பெண் ஒருவருக்கு உடல் ஊனமுற்றேவா குழந்தைகள் பிறக்கும் .







கதையின் இறுதி பகுதியில் வரும் ஒரு இடம் நாவல் படிப்பவர்களை அசைத்துபோட்டது போலிருக்கிறது .உடல் குறை உள்ள பெண்ணிற்கு பிறந்த ஒரு குழந்தை அதுவும் ஒரு விரலுடன் ஊனமுற்ற குழந்தை சிறு வயதிலேயே பிரிதேடுக்கபட்ட அந்த குழந்தை பெரியவன் ஆனதும் யாரேனே தெரியாமலேயே மது கொடுத்து தாயிடமே குழந்தை உருவாக்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதும் அந்த தாய் அலறுவதும் கதையாக முடித்து இருக்கிறார் .நாவல் படித்து வரும்போதே நிறைய இடங்களில் கெட்ட வார்த்தைகளில் கதை நிரப்பப்பட்டு இருக்கு .அப்படி எழுதுவதுதான் இலக்கியம் போலருக்கு