Friday 1 February 2013

டேவிட் - நறுக் விமர்சனம்


போதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம்.

விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு சென்றீர்கள் என்றால் அது இரண்டும் இல்லை.

இது வேறு தளத்தில் இயங்கும் படம்.இருவர் நடிப்பும் மட்டும் அல்ல எல்லோருடைய நடிப்பும் நன்றாக இருக்கு.அதற்க்காக உங்களால் பொருமையாக படம் பார்க்கமுடியும் என்று என்னை சொல்ல சொன்னால் என்னால் முடியாது.இருக்கையில் நெளிவதை ஒருபோதும் தடுக்க முடியாது.

இது போன்ற படம் ஹிந்தியில் நன்றாக ஓடுவதற்க்கு சாத்தியம்.தமிழில் முயன்று இருக்கின்றார்கள்.ரசிகர்கள் மனநிலை எப்படி இருக்கும் என சொல்ல முடியவில்லை.

விக்ரம் அப்பாவாக வருபவர் இறந்து ஆவியாக வருபவராக நடித்து இருக்கின்றார்.அவர் காட்சி வருகின்றபோது கொஞ்சம் சிரிக்க முடிகிறது.

மற்றபடி ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

இசை நிறைய பேரின் பெயர் டைட்டிலில் வருகிறது.அவ்வளவுதான்.

படம் பார்க்கலாம் என்று கேட்டால் பார்க்கலாம் என சொல்வேன் வேறுவிதமான தளத்தில் படம் பார்க்க ஆசைப்பட்டால்.

பொழுதுபோக்கு சித்திரமாக நினைத்து போனீர்கள் என்றால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.......


9 comments:

  1. இதுக்கு பேரு விமர்சனமா?

    ReplyDelete
  2. APPA neengale sollunga boss vimarsanam eppadi seyrathunnu.படத்தை ரொம்ப நோகடிச்சு எழுதவேனாம்னு இப்படி எழுதி
    இருக்கேன்

    ReplyDelete
  3. APPA neengale sollunga boss vimarsanam eppadi seyrathunnu.படத்தை ரொம்ப நோகடிச்சு எழுதவேனாம்னு இப்படி எழுதி
    இருக்கேன்

    ReplyDelete
  4. கதையையோ விக்ரம் ஜீவா நடிப்பையோ பற்றி ஒண்ணுமே சொல்லலையே...

    ReplyDelete
  5. IRUVAR nadippume arumai.padam nalla padame.ஆனால் அதன் உள் அர்த்தத்துக்குள் போய் வருவது சாதாரன ரசிகனுக்கு சிரமம். இது ஏ க்லாஸ் ரசிகன் மட்டுமே ரசிக்கும் சாத்தியம்.விஸ்வரூபம் விமர்சனம் எழுதி மனம் கொஞ்சம் காயப்பட்டு இருந்து இப்பொழுதுதான் மீன்டு இருக்கிறேன். அதுதான் விமர்சனம் சுருக்கமாக

    ReplyDelete
  6. இது ஒரு விமர்சனம். இதுக்கெல்லாம் ஒரு பதிவு

    ReplyDelete
  7. அண்ணா ஹிந்தில பார்த்துட்டு இன்னும் நான் தெளியல..நீங்க என்னடான்னா ஹிந்தில நல்லா இருக்குமாம்.....செம மொக்கை படம்....

    ReplyDelete