Wednesday 22 October 2014

கத்தி- செம ஷார்ப்........ விமர்சனம்



கத்தி என் பார்வையில்
முதலில் முருகதாசுக்கு வாழ்த்துக்கள்.
விஜய் கதாநாயகனாக இருந்தும் ஓப்பனிங் மிக சாதரனமாக விஜயை அறிமுக படுத்தியதற்க்கும் ஓப்பனிங் பாட்டு வைக்காததற்க்கும்.
படத்தில் மூன்று சன்டைகாட்சிகள் இருந்தபோதும் இதை முழுக்க ஆக்சன் படம் என சொல்ல முடியாது.
படத்தின் பாடல்கள் நன்றாக இருந்த அளவுக்கு பின்னனி இசை கொஞ்சம் பத்தாதுதான்.இருந்தும் ஓகே.
ஒளிப்பதிவு நன்றாக இருக்கு.கதைக்களத்தின் மூடுக்கேற்ப்ப ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் ஒளிப்பதிவாளர்.
நடனம் மிக நன்றாக இருக்கு.சொல்லவே வேனம் நடனத்தில் தன்னை அடிச்சுக்கு ஆளே இல்லை என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கின்றார்.
சமந்தா ஒரு கதாநாயகிக்கு என்ன வேலை இருக்குமோ அதை மட்டும் செய்கின்றார் கொஞ்சம் அழகாக இருக்கின்றார்.
அனல் அரசுவின் சன்டை அனல் பறக்கின்றது.அதுவும் எதிர்பாரமல் திடிரென நடக்கும் அந்த முதல் சண்டை அபாரம்.


சரி இனி கதைக்கு வருவோம்.
ஜெயிலில் இருந்து ஒரு கைதி தப்பிக்கின்றார் அறிமுக காட்சியில்.அவனை பிடிக்க அங்கே கைதியாக இருக்கும் பிராடு விஜய் உதவியை நாடுகின்றனர் போலீஸ்.
அவரும் சரியாக கைதி இருக்கும் இடத்தை போலிஸோடு சுற்றிவலைத்து பின்பு போலிஸ் பார்க்கும்போது கைது செய்ய உதவிய விஜய் போலிசிடம் இருந்து தப்பிவிடுகின்றார்.

தப்பிய விஜய்(கதிரேசன்) தன் நண்பனின் உதவியை நாடுகின்றார் போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்துக்கு தப்பி செல்ல.அவரும் பாஸ்போர்ட்க்கு ஏற்ப்பாடு செய்து ஏர்போர்ட்டில் தாய்லாந்து செல்ல காத்து இருக்கும்போது அங்கே சமந்தாவை பார்க்கின்றார்.அவரையே பார்க்கும்போது சமந்தா தன் நம்பரை கொடுத்து போன் செய்ய சொல்லி சென்று விடுகின்றார்.சமந்தாவுக்காக தாய்லாந்து செல்லாமல் டிக்கெட்டை கிழித்து எறிந்து விடுகின்றார்.
விஜயும் அவரின் நண்பனும்(சதீஷ்) இரவில் சமந்தா கொடுத்த நம்பருக்கு போன் செய்கின்றனர்.அது வேரொறு நம்பருக்கு போகின்றது.ஏமாந்துவிட்டோம் என விஜய் சொல்லிக்கொண்டு இருக்கும்போது வேகமாக வரும் ஒரு லாரி மோதி நிக்கின்றது.அந்த லாரியை தொடர்ந்து வரும் காரில் இருந்து நாலைந்துபேர் இறங்கி காருக்குள் இருப்பவரை சுட்டுவிட்டு செல்கின்றனர்.


காருக்குள் இருப்பவர் யாரெனெ விஜய் ஓடிவந்து பார்க்கும்போது அங்கே குண்டடிபட்டு இன்னொரு விஜய்(ஜீவா) கிடக்கின்றார்.அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும்போது விஜய்க்கு(கதிரேசன்) ஒரு யோசனை வருகின்றது.அதுபடி ஜீவாவின் பொருட்க்களை எடுத்துக்கொண்டு தன் பர்சை அங்கே விட்டுவிடுகின்றார்.போலிஸ் மறுபடியும் ஜீவாவை கதிரேசன் என நினைத்து ஜெயிலுக்கு கொண்டு போய்விடுகின்றனர்.
மறுநாள் கதிரேசனும் அவரின் நண்பனும் மறுபடியும் தாய்லாந்து போவதர்க்காக பேசிக்கொண்டு செல்கையில் அந்த வழியாக வரும் கலேக்டர் அவர்கள் இருவரையும் தன் காரில் ஏறசொல்லி உன் பெயருக்கு 25லட்சரூபாய் செக் வந்துவிட்டது என சொல்லி ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டுபோய்விடுகின்றார்.செக்கை ஆசையாக வைத்து இருக்கும் விஜயிடம் இருந்து பிடுங்கி ஒரு முதியவர் கிழித்துவிடுகின்றார்.கிடைத்த பணம் போச்சே என இருக்கும்போது பேட்டி எடுக்க வந்த இரண்டு வெளிநாட்டு பெண்களால் கதிரேசன்(விஜய்) தாக்கப்படுகின்றார்.அவர்களிடம் இருந்து தப்பித்து விடுகின்றார்.

மறுபடியும் கதிரேசன் வில்லன் ஆட்க்களால் கடத்தி வில்லன் இருப்பிடம் கொண்டு செல்லப்படுகின்றார்.அங்கே வில்லன் பேரம் பேசுகின்றார்.25கோடி தருகின்றேன் கோர்ட்டில் நடக்கும் கேசை வாபஸ் வாங்கு மற்றும் நாலு பேரிடம் கையெழுத்து வாங்கிட்டு வா என அட்வான்சாக 5கோடி ரூபாய் கொடுக்கின்றான் வில்லன் கதிரேசனை ஜீவா என நினைத்து.கதிரேசனும் சரியென பணத்தை வாங்கி கொண்டு வருகின்றார்.
நண்பனிடம் செய்யப்போகும் வேலைக்கு 25கோடி பணம் அட்வான்ஸாக 5கோடி வாங்கிவிட்டேன் என சொல்லும்போது முதியோர் இல்லத்தில் இருந்து போன் வருகின்றது.
உனக்கு ரோட்டரி சங்கத்தில் விருதும் 4லட்சம் பணமும் கொடுக்கின்றார்கள் என சொல்ல அந்த பணத்தையும் வாங்கிவிடுவோம் என நண்பன் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களோடு விழாவிற்க்கு செல்கின்றார்.அங்கே விஜய் யார் என திரைப்படம் திரையிடப்படுகின்றது.அதோடு அந்த நாலு லட்சரூபாய் யார் யாரல் கொடுக்கப்பட்டது என சொல்லுகின்றார்கள்.
இதற்க்குமேல் திரையில் கதையை பார்த்துக்கொள்ளுங்கள்.
விஜய்க்கு எந்த பஞ்ச் வசனமும் கொடுக்கபடவில்லை இடைவேளையின்போது வரும் ஐயாம் வெயிட்டிங் எனும் வசனம் தவிர.
மிக இயல்பாய் நடித்து இருக்கின்றார்.
கடைசிக்கட்ட போரட்டம் மிகையாக இருந்தாலும் கூட எதுவும் சாத்தியமே என படுகின்றது.


கிராமத்து விவசாயின் நீராதாரம் பற்றியும்,அதை உறிஞ்சும் கார்ப்பரேட் கம்பெணிகள் பற்றிய கதை இது.
மீடியாக்களின் ஸ்லாட் பற்றி அப்பட்டமாக பேசப்படுகின்றது.
கிங்பிஷர் பீர் கம்பெணிக்காரனின் கடன் பற்றியும் பேசப்படுகின்றது.
சென்சார் இதை எல்லாம் கட் செய்யாமல் விட்டதுக்கு அவர்களுக்கும் நன்றி சொல்லனும்.
இது விஜய் படம் என்பதை விட மிக அவசியமான படமும் கூட.
விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும்.
யார் எப்படி வேண்டும் என்றாலும் விமர்சனம் எழுதலாம்.
ஆனால் நீங்க போயி திரை அரங்கில் பார்த்து விமர்சனம் எழுதுங்க.
விஜய்க்கு இன்னொரு மைல் கல் கத்தி.
ஆனால் இன்னொரு துப்பாக்கி அல்ல இந்த படம்.